Categories
தேசிய செய்திகள்

சி.ஏ.ஏ. வன்முறை குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரமிது – அமித்ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட சிறு குழுக்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

டெல்லி மேம்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்பான எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. டெல்லியில் நிலவிய அமைதியான சூழ்நிலையை அவர்கள் சீர்குலைத்துவிட்டனர்.

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின்போது சிலர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அந்தச் சிறு குழுக்கள் விரைவில் வீழ்ந்துவிடும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரமிது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Categories

Tech |