நூதன முறையில் சாராயம் விற்பனை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொண்டம்பல்லி- செர்லப்பல்லி பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 3 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கார் ஓட்டுனரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கோட்டைசேரி பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் சாராயத்தை கடத்தி வந்து பயணிகளை காரில் சவாரி ஏற்றி செல்வதற்காக காத்திருப்பது போல நடித்து நூதன முறையில் சாராயத்தை விற்பனை செய்ததுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தராஜதுரையை கைது செய்ததோடு, சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.