தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலிருந்த அம்மன் சிலையை தனிப்படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தவாரம் பிரேம்குமார் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை இருந்ததை பார்த்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் அந்த சிலையை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்து வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த பிரேம்குமாரின் உறவினர் சிலையில் இருந்து ஒரு பாகத்தை எடுத்து சென்று அதன் மதிப்பை தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து ரகசிய தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்சென்று அந்த சிலையை மீட்டு திருவலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரேம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.