Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொடியேற்றும் விழா…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. பங்கேற்ற தொண்டர்கள்…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூடலூர் ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழா கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு கிளை நிர்வாகி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் வரவேற்புரையாற்றியுள்ளார்.

இதனையடுத்து கட்சியின் மாவட்ட செயலாளர் கொடியேற்றி வைத்து பேசியுள்ளார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் கிளை நிர்வாகி நன்றியுரையாற்றியுள்ளார்.

Categories

Tech |