Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் கேம்கள்”…. தடை சட்டம் இயற்ற உங்களுக்கு அதிகாரம் உண்டு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

ஆன்லைன் கேம்களை தடுக்கும் சட்டங்களை இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், “ஆன்லைன் கேம் என்பது உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து வரக்கூடிய சூழலில், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான விபரங்களை மத்திய அரசு அறிந்து வைத்துள்ளது. இந்நிலையில் அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின்படி சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி சில மாநிலங்கள் ஆன்லைன் கேம்களை தடை செய்துள்ளது. மத்திய அரசும் தனக்குஇருக்கக்கூடிய  அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனை நெறிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது”எனக் கூறியுள்ளது..

Categories

Tech |