சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 6, 7 ஆம் தேதிகளில் வட கடலோர தமிழகம், அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதன்பின் காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories