Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 11 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு…. சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்க பிப்ரவரி 11ஆம் தேதி வரை தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள் அரங்குகளில் கூட்டம் நடத்தும் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். பாதயாத்திரை, சைக்கிள் பேரணி, வாகன பேரணிகளுக்கு இந்த தடை ஏற்கனவே உள்ள நிலையில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |