ஒரு நாளைக்கு சரியாக 10 லட்சம் சந்தாதாரர்களை மெட்டா வெர்ஸ் நிறுவனம் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா வெர்ஸ் என மாற்றியபின் 4வது காலாண்டில் குறைந்த அளவிலேயே சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. 2021 ம் நிதியாண்டில் அடுத்தடுத்து 2 காலாண்டில் ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. மெட்டா வெர்ஸை உலகம் முழுவதும் தினமும் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 193 கோடியாக உள்ளது.
மேலும் 4 வது காலாண்டில் 10.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர லாபத்தை மெட்டா நிறுவனம் சம்பாதித்துள்ளது. இது சென்ற 4 வது காலாண்டோடு ஒப்பிடும் போது 8 சதவீதம் குறைவாக உள்ளது. மெட்டா வெர்ஸ் பங்குகளின் விலை நேற்றைய நிலவரப்படி பார்த்தோமானால் 22 சதவீதம் குறைந்து 250 டாலராக உள்ளது.