சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரைப்பற்றி சில விஷயங்கள் உங்களுக்காக இங்கு கூறப்பட்டுள்ளது.
சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சிம்பு நடிப்பை பிரம்மாதமாக வெளிப்படுத்தினார். அனைவரும் வியக்கும் வண்ணம் அவரின் நடிப்பு இருந்தது. தற்போது முன்னணி நடிகராக உள்ளார். சிம்பு இடையில் தோல்விகள் பல கண்டாலும் தற்பொழுது மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, மீண்டும் சிம்பு டாப் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். சிம்புவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இடையில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத போதிலும் ரசிகர்கள் கூட்டம் அவரை மறக்கவில்லை.
சிம்புவிற்கு பல ரசிகர்கள் கூட்டம் இருப்பினும் சிம்புவிற்கு பிடித்த இரண்டு நடிகர்கள் உள்ளார்கள். அவர்கள் “சூப்பர் ஸ்டார் ரஜினி” மற்றும் “தல அஜித் குமார்”. இதை இவர் பல இடங்களில் கூறியுள்ளார். சிம்புவிற்கு ஆரம்பத்திலிருந்தே ரஜினியை மிகவும் பிடிக்குமாம். ரஜினியின் இரண்டு படங்களை ரீமேக் செய்து, அவர் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். அந்த இரண்டு படங்கள் “அண்ணாமலை” மற்றும் “படையப்பா”.
சிம்புவிற்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் விளையாடுவாராம். அவருக்கு பிடித்த விளையாட்டுகள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து. சினிமா துறையில் நடத்தப்பட்ட சினிமா நட்சத்திர கிரிக்கெட்டில் இவர் விளையாடியுள்ளார் குறிப்பிடப்படவேண்டியவை. எழுதுவதும் பாடுவதும் இவரின் பொழுதுபோக்கு விஷயங்கள். இவர் நண்பர்களுடன் வீடியோ கேம்ஸ் விளையாடுவதையும் மற்றொரு பொழுதுபோக்காக வைத்துள்ளார். அவர் வைத்திருக்கும் ஸ்டூடியோவில் தனிமையில் இருப்பது அவருக்குப் பிடிக்குமாம்.