Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்டை வியாபாரிக்கு சொந்தமானது…. சோதனையில் தெரிந்த உண்மை …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 1.85 லட்சம்  ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த முட்டை வேனை  நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1.85 லட்சம்  ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தொட்டியம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  பறிமுதல் செய்யப்பட்ட பணம்   முட்டை வியாபாரியான ஜெயராமன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |