லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவிற்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
சிம்பு ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை தந்தாலும் இடையில் அவரின் படவாய்ப்புகள் குறைந்தன. சூப்பர் ஹிட் திரைப்படத்துக்காக காத்திருந்த சிம்பு “மாநாடு” படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். இதன் மூலம் சிம்பு மீண்டும் டாப் ஹீரோக்களில் வந்துள்ளார். தற்போது சிம்புவின் வசம் பல படங்கள் உள்ளன. அவை, கௌதம் மேனன் இயக்குகின்ற “வெந்து தணிந்தது காடு”, கோகுல் இயக்குகின்ற “கொரோனா குமார்”, கிருஷ்ணா இயக்குகின்ற “பத்து தல” உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இறுதிகட்டத்தில் உள்ளது.
இத்திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக கூடும் என்று படக்குழுவினர் இடையே பேசப்படுகிறது. இன்று சிம்புவின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் வீடியோ கிலிம்ஸ் வெளியாக இருக்கிறது. சிம்பு தற்போது துபாயில் இருக்கிறார். அவரின் பிறந்த நாளை துபாயில் தான் கொண்டாட உள்ளாராம். துபாய் அரசு சிம்புவிற்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதை அறிந்த சிம்புவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளார்கள். இதற்கு முன்பு கோல்டன் விசாவை மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், திரிஷா உள்ளிட்டோர் வாங்கியுள்ளனர். மேலும் சிம்புவின் “மாநாடு” பட வெற்றி, டாக்டர் பட்டம், கோல்டன் விசா, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என சிம்புவிற்கு வெற்றி மேல் வெற்றியாக உள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.