தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்கு சீட்டுகளில் குழப்பம் இருப்பதாக அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குப்பதிவுக்கு 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 57.50% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு 5 மணிக்கு நிறைவடைந்து, பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. வருகின்ற 30 ஆம் தேதி இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.