7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 2-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி தன் தாயாரிடம் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.