Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற பெண்…. கூட்ட நெரிசலில் மர்மநபர் செய்த வேலை…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் பெண்ணிடம் பணம், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் மாலையில் அனைத்து பள்ளிகளும் முடிவடைந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது கூடலூர் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர். இந்நிலையில் பாலப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் சந்திரா என்பவர் தன்னுடைய பையைக் கையில் வைத்து கொண்டு பேருந்தில் ஏற முயன்றார்.

அப்போது மர்ம நபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சந்திராவின் பையில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் அரசு பேருந்து டிரைவர் பேருந்தை காவல்நிலையத்திற்கு ஓட்டி சென்றார். இதனையடுத்து காவலர்கள் பேருந்தில் சோதனை செய்ததில் பணம் கிடைக்கவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |