Categories
தேசிய செய்திகள்

10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள்  வழங்கப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு அடுத்த வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்நிலையில் 2021 -2022ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய கல்வி வாரியம் திட்டமிட்டது. அதுமட்டுமல்லாமல் நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கு பதில் 2 கட்டமாக பருவத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் குறைக்கப்பட்ட பாடத்திட்ட அடிப்படையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல்கட்ட பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கொள்குறி அடிப்படையில் 50 வினாக்கள் இடம் பெற்றிருந்து. ஒன்றை மணி நேரம் வழங்கப்பட்டு தேர்வு சிறந்த முறையில் நடைபெற்றது. அதன்பின் மாணவர்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான CBSE முதல் பருவத்தேர்வு முடிவுகள் 2022 ஜனவரி மாதம் 2ஆம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்த சமயத்தில் கொரோனா 3-ம் அலை வேகமெடுத்ததனால் தேர்வுகள் வெளியாகுவதில் கால தாமதம் ஆகியுள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த வாரம் CBSE 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகுமா என்று கேள்வி எழுப்பியபோது அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த கட்ட பொதுத்தேர்வு மார்ச் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |