மேஷ ராசி அன்பர்களே..!! இன்று மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினர் நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். பணபரிவர்த்தனை இன்று சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்துக்கள் வாங்க கூடும்.
உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். மனதில் இருந்து வந்த இனம் புரியாத வேதனை மாறும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். தொழில் சிறப்பாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கு. விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த உணவை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்