“வலிமை” திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வலிமை”. இந்தப்படத்திற்கான படப்பிடிப்புகளுக்கு இரண்டு வருடங்களானது. கொரோனாவினால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இறுதியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் மறுபடியும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் பொங்கலுக்கு “வலிமை” ரிலீசாகவில்லை. இதனால் அஜித்தின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனென்றால் கடந்த மூன்று வருடமாக அஜீத்தின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. H.வினோத்தின் இயக்கத்தில்உருவான “வலிமை” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் பாடலான “ஹே மாதிரி” ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
தற்போது யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு “ஜிப்ரான்” என்பவர்தான் இசை அமைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் வேறு ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் யுவன் ஷங்கர் ராஜா “வேற மாதிரி” பாடலுக்கு இசை அமைப்பதற்கு 6 மாதம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் பாடலுக்கு இசை அமைப்பதற்காக பல நாட்கள் வினோத்தை அலையவைத்தாக தகவல் கசிந்திருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.