மிதுன ராசி அன்பர்களே…!! இன்று சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதிகளை மீறி நீங்கள் நடக்கக்கூடும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் தான் இருக்கும். உணவு பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். தாயின் அன்பும் ஆசையும் மனதில் நம்பிக்கையை கொடுக்கும். இன்னைக்கு அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.
மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் இன்று கிடைத்தாலும், அதே நேரத்தில் நீங்கள் கொஞ்சம் விழிப்புடன் செயல்படுங்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் வளப்படும். சகோதரர் வழியிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சொல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால், எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்