Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தந்தை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சப்பாணி கோவில் பகுதியில் வினோதினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்துள்ளார். இதனால் வினோதினியின் தந்தை அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் வினோதினி அவரது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். அதன்பின் தொடர்ந்து குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வினோதினி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோதினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |