அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓட்டம்பட்டி பகுதியில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமாநின் உடலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.