தனுஷ் முன்பியிருந்தது போல் தற்போது இல்லை என அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
நடிகர் தனுஷ் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. அதை எல்லாம் தனுஷ் பொருட்படுத்தாமல் சினிமாவில் கவனத்தை செலுத்தினார். தற்பொழுது தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். தற்பொழுது தனுஷ் நடிக்கும் படங்கள் ஓடிடியில் தான் வெளியாகி வருகிறது. சென்ற வருடம் “ஜகமே தந்திரம்” திரைப்படம் ஓடிடியில் வெளியானது. பாலிவுட்டில் “அத்ராங்கி ரே” திரைப்படம் ஓடிடியில் வெளியானது. தற்போது இவர் நடித்துள்ள “மாறன்” திரைப்படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இந்த சமயத்தில், தனுஷ் தனது மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் அவரவர்களின் தொழில்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ் தற்போது “வாத்தி” திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷுடன் பழகுபவர்கள் தற்போது அவரிடம் நிறைய மாற்றங்கள் உள்ளதாக கூறுகின்றனர். எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலவென இருக்கும் தனுஷ் தற்போதெல்லாம் கடுகடுவென இருக்கிறார் என உடன் நடிப்பவர்கள் கூறுகிறார்கள். தனுஷிடம் விவாகரத்து வேண்டாம், இருவரும் இணைந்து வாழுங்கள் என்று கூறுவோரிடமிருந்து தனுஷ் விலகிக் கொள்கிறாராம். அவர் இனிமேல் சினிமாவில் முழு கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.