இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று (பிப்..4) முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதன்பின் பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை வெப்பமானி கொண்டு அளவீடு செய்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது..