Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவைக்கு சுவையாகவும் …உடலுக்கு ஊட்டசத்து …டெய்லி சாப்பிடலாம் …!!

நெல்லிக்காய் துவையல்

 தேவையானப் பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய்  – 4

தேங்காய்த்துருவல்-கால் கப்

பெரிய வெங்காயம்- 1

இஞ்சி- சிறு துண்டு

கடுகுகால் -டீஸ்பு ன்

உளுந்து-2 டேபிள் ஸ்பு ன்

மிளகு-அரை ஸ்பு ன்

சீரகம்-அரை ஸ்பு ன்

வர மிளகாய்- 6

பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை

உப்பு-தேவையான அளவு

எண்ணெய்-தேவையான அளவு

Image result for நெல்லிக்காய் துவையல்

செய்முறை :

நெல்லிக்காய் துவையல் செய்வதற்கு முதலில் பெரிய வெங்காயம், இஞ்சி, நெல்லிக்காய், ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சு டானதும், அதில் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.அதனுடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, மற்றும் நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காய் வதங்கியதும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், தேங்காய்த்துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

வதக்கி ஆற வைத்த கலவை நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தால்

                                                     சுவையான நெல்லிக்காய் துவையல் ரெடி.

Categories

Tech |