வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் ஆமோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே ஆமோஸ் வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ஆமோஸ் அந்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதில் மனமுடைந்து காணப்பட்ட ஆமோஸ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆமோஸின் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.