Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன்”…. சினிமாத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் நிறைவு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து சினிமா துறைக்கு வந்தார். இவர் “மெரினா” படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். தற்போது இவர் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சாதித்தவர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் 2007ஆம் வருடம் ஒளிபரப்பான “கலக்கப் போவது யாரு” மூலம் மக்களுக்கு அறிமுகமானார். கலக்கப்போவது யாருக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “அது இது எது” நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளர் ஆனார். பின்னர் பாண்டிராஜன் இயக்கத்தில் வெளிவந்த “மெரினா” படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார்.

பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.  அடுத்து அவர் பெரிய பட்ஜட் படங்களான ரெமோ, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் ஹீரோக்களில் இடம் பிடித்தார். இவர் நடிகரென்று மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் பாடலாசிரியர் பாடகர் என தனது பன்முகத்தன்மையை வெளிக்காட்டுகிறார்.சிவகார்த்திகேயனை குழந்தைகள் முதல் பெரியோர் வரை என அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இவர் தற்போது டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது ரிலீஸுக்காக காத்திருக்கிறது. தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் படத்தில்  சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |