வீடு புகுந்து 3 1\2 பவுன் நகை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்குளம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் அவர்கள் குளத்து வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து பொன்ராஜும் அவரது குடும்பத்தினரும் வேலைவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து பொன்ராஜும் அவரது குடும்பத்தினரும் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 1\2 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொன்ராஜ் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.