மத்திய அரசு தொழிலாளர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் இபிஎஃப் எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகச் சிறந்தது ஆகும். இபிஎஃப் முதலீடுகளுக்கு 8.5% வட்டி அளிக்கப்படுகிறது. அதோடு இஸ்பிஎப்ல் 1.5 லட்சம் வரையிலான எந்த முதலீட்டுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஊழியர் தனது இபிஎப் தொகையை தான் பணியில் இருக்கும் போது எடுக்கவில்லை என்றால் அது அவருக்கு முதிர்வு காலத்தில் மிகுந்த பலனை அளிக்கும்.
தொடர்ச்சியாக அதிகரிக்கும் வட்டி விகிதம் மற்றும் வரிவிலக்கு போன்றவை தொடர்ந்து பணத்தின் அளவை அதிகரிப்பதால் ரிட்டையர் ஆகும்போது அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை பென்ஷனாக பெறுவார். பத்தாண்டுகளுக்கு ஒருவர் EPF-ல் இருந்து பணத்தை திரும்பப் பெறவில்லை என்றால், ஒரு உறுப்பினரின் ஓய்வூதியத்தின் பலன்கள் அதிகரிக்கும். 58 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதிய நிதியிலிருந்து ஓய்வூதியப் பலன்களைப் பெறலாம்.