மராட்டிய மாநிலம் தானேவில் அதிவிரைவு போலீஸ் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் மகேஷ் மோர் 27 வயதாகும் இவர் வழக்கம்போல அதிவிரைவு படையில் உள்ள போலீசார் அனைவரும் கலந்து கொள்ளும் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கான்ஸ்டேபிள் மகேஷ் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சக போலீசார் அவரை மீட்டு தானே பகுதியிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர். இதனால் உடன் பணியாற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் மகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவரது இறப்பு குறித்த காரணம் தெரியவரும் அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸ் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.