மதுரை மாநகராட்சி தேர்தலில் மக்கள் கோரிக்கை குறித்து ஒருவர் கூறுகையில், பத்து வருடமாக மதுரையில் வந்து பயங்கர போக்குவரத்து இடையூறுகள் வந்திருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. எதுவுமே எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை. மக்கள்தொகை இருக்க இருக்க அதிகரித்து இருக்கிறது.
மக்கள் ஜனத்தொகை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்புகளும் அமைக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னாடி என்ன கட்டமைப்பு இருந்ததோ அதே கட்டமைப்புதான் இப்பவும் இருக்கிறது.
மதுரை கோரிக்கை குறித்து மற்றொருவர் கூறுகையில், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் இதை கடப்பதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஏனென்றால் ரோடு வசதி ரொம்ப சரியில்லாமல் இருக்கிறது, இது வந்து கொஞ்சம் மேம்பாலங்கள் போட்டு அமைத்துக் கொடுத்தார்கள் என்றால் பொதுமக்களுக்கு நன்றாக இருக்கும்.
மதுரைவாசி ஒருவர் கூறுகையில், பெரியார் பேருந்து நிலையம் கூட பார்த்தீர்கள் என்றால் ஒரு பக்கம் முடித்துவிட்டார்கள், இன்னொரு பக்கம் முழுவதுமாக முடிக்கவில்லை அந்த பணிகள் மிகவும் மெதுவாக நடக்கிறது. இது இல்லாமல் கொஞ்சம் வேகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மதுரைக்கு வந்து இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள், நல்ல துறையில் மதுரைக்கு கிடைத்திருக்கிறது.
இன்னும் நிறைய மதுரைக்கு செய்ய வேண்டும். ஒரு சென்னையோட வளர்ச்சியோ, திருச்சியோட வளர்ச்சியோ மதுரைக்கு வந்து கிடையாது. மதுரையை கொஞ்சம் கேர் பார்க்க வேண்டும். 500 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது என்பது ரொம்ப நல்ல விஷயம். அது முறையாக செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என ஒருவர் தெரிவித்தார்.