Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”கண்களின் பாதுகாப்பில் கவனம்”…. தொழில் தொடங்க சரியான தருணம் ……!!!

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு அனுபவம் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிதானமான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். இன்று தொழில் நிமித்தமாக சில தூர தேச பயணம் மேற்கொள்வீர்கள். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமாக அமையும்.

கலைஞர்களுக்கு தடங்கலின்றி புதிய வாய்ப்புகளை பெறக்கூடும். புகழ் பாராட்டு வந்து சேரும். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாகவே இருக்கும். அதே போல வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது மட்டும் ரொம்ப பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். இன்று சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் இருக்கு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால், எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாகா கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி, செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

 

Categories

Tech |