இணையத்தின் மூலம் ஏற்பட்ட காதலை நம்பி இங்கிலாந்துக்கு வந்த கனட இளம்பெண்ணை காதலனே கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கனடாவில் asley என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் இணையத்தின் மூலம் ஏற்பட்ட காதலை நம்பி jack என்ற இளைஞரை காண்பதற்காக இங்கிலாந்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் jack தன்னை நம்பி வந்த asley வை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து chelmsford ல் அமைந்துள்ள வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் jack கை கைது செய்துள்ளார்கள். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நான் தான் asley வை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.