துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உறவினர்கள் அன்பு பாசத்துடன் உங்களை அணுகுவார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெரும். பண வரவிற்கு திருப்திகரமான நிலை உண்டாகும். காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். இன்று பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்கான செலவு செய்வீர்கள். வாகன திருப்தி ஏற்படும். இன்று வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும்பொழுது ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை இன்று அடையக்கூடும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கடினமாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
விளையாட்டை மட்டும் ஏறக்கட்டி விட்டு பாடங்களை படிப்பது சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால், எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்