இளவரசர் ஹரியின் நீண்டகால நண்பரான Tom “Skippy” Inskip ஹரி மேகன் திருமணம் நடந்த அன்று மாலை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது Skippy தன் மனைவி லாராவுடன் காலையில் நடந்த திருமணத்திற்கு வந்துள்ளார். ஆனால் ஹரியை மேகன் ரொம்பவே மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே ஹரி மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பட்டியலிலில் இருந்து அவருடைய நெருங்கிய நண்பரான Skippy பெயரை நீக்கியுள்ளார். இந்த நிலையில் ஹரியின் நண்பர்கள் பலரும் இனி யாரெல்லாம் தங்கள் வாழ்வில் இருக்க வேண்டும் என்பதை காட்டும் விதமாக அந்த வரவேற்பு நிகழ்ச்சியின் விருந்தினர் பட்டியல் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.