Categories
அரசியல்

“சசிகலா மீது நடவடிக்கை எடுக்க அனுமதி…” அப்போ மறுபடியும் கம்பி எண்ண வேண்டியது தானா…!!

கடந்த 1991-1996 வரையிலான அதிமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா காலமானதால் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு 2 கோடி வரை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் அளித்திருந்தார்.

அதோடு சசிகலா சுடிதார் அணிந்து ஷாப்பிங் செல்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் சொகுசு வசதிகளை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மைதான் என சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அரசு சார்பில் வழக்கறிஞர் மன்மோகன் ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இதனையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Categories

Tech |