Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!! ஜாலியான ஊழியர்கள்….!!

புதுச்சேரியில் இரண்டு நாட்களாக மின்வாரிய ஊழியர்களால் நடத்தப்பட்ட தொடர் போராட்டம் முதல்வர் ரங்கசாமி உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது. புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தை நிறுத்துவதற்காக மின்வாரிய ஊழியர்களுடன் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊழியர்கள் கூறுகையில், அரசு தங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளதாகவும் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கை விடுவதாகவும் கூறினார். இதுகுறித்து மின் துறை சங்க பொதுச் செயலாளர் வேல்முருகன் கூறுகையில், பொதுமக்கள், மின்துறை ஊழியர்கள், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு தனியார்மயமாக்கல் குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார். அதோடு இந்த போராட்டம் வாபஸ் பெறப் பட்டதாகவும் நாளை முதல் வழக்கம்போல் வேலை நடைபெறும் எனவும் கூறினார்.

Categories

Tech |