Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணை தள்ளிவிட்ட ஓட்டுநர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

பேருந்து தாமதமாக புறப்படுவதை தட்டிக்கேட்ட பெண்ணை ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் செந்தில்-முருமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரிமுனை செல்வதற்காக அதிகாலை 5 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் பெரும்பாக்கம் பணிமனைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து பணிமனையில் இருந்து 5.10-க்கு புறப்பட வேண்டிய அரசு பேருந்தில் கணவன் மனைவி இருவரும் ஏறி அமர்ந்தனர். ஆனால் 5.30 மணி ஆகியும் பேருந்து புறப்படாமல் இருந்துள்ளது.

இதுகுறித்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஓட்டுநரிடம் தட்டி கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஓட்டுநர் கணவன், மனைவி இருவரையும் கீழே தள்ளிவிட்டதில் முருமா மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரை கண்டித்து பேருந்து நிலையம் முன்பாக அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பெண்ணை தாக்கிய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பேருந்து ஓட்டுநர் பெண்ணை கீழே தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |