குடோனில் பற்றி எரிந்த தீயில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி சாம்ராஜ் பேட்டை பகுதியில் ரஜினி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர்.இந்த தீவிபத்தில் இருந்த 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.