சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் 10 வருடத்திற்கு முன் அவரின் அறிமுக படம் குறித்து பதிவிட்டிருந்தார். அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் “டான்”. இப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சந்தேகமாகவே உள்ளது.
Marina prints ready 🙂 fingers crossed:)))) pic.twitter.com/e6hGV2uB
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 2, 2012
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் அறிமுகம் படத்தைப் பற்றி கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி “மெரினா ரிலீஸ் தயாராக உள்ளது” என்று பதிவிட்டிருந்தார். மேலும் இப்பொழுது கடந்த பத்து வருடங்களாக அவரின் மாபெரும் வளர்ச்சியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்