Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் பள்ளிகள் பிப். 1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகளை நடத்துகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் இருப்பவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதைத் தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் உடனே ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். இதனிடையில் இடவசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |