வருகிற மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வருகிற மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கிறது. அதே சமயத்தில் 2022 ஆம் வருடத்துக்கான முதுநிலை நீட் தேர்வு மார்ச் மாதம் 12ஆம் தேதி நடக்க இருந்தது.
இந்நிலையில் இந்த வருடத்துக்கான முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது 6 முதல் 8 வாரங்கள் வரையில் இந்த முதுநிலை மருத்துவ நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.