Categories
உலக செய்திகள்

“இந்து மத தொழிலதிபர் சுட்டு கொலை” …. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!

கோட்கி மாவட்டத்தில் இந்து மத தொழிலதிபர் மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள சிந்து மாநிலத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இந்து மத தொழிலதிபரான சத்தன் லால் என்பவருக்கு  2 ஏக்கர் நிலம் கோட்கி மாவட்டத்தில் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை தன்னிடம் கொடுத்து விட்டு இந்தியாவிற்கு செல்லும்படி சத்தன் லாலுக்கு முஸ்லிம்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளார்கள். அதனை மறுத்த சதன் லால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டததில் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் அவர் நிலத்தில் பருத்தி ஆலை, மாவு ஆலை துவங்குவதற்கு விழா நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரால் சதன் லால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து இந்துக்கள் கோட்கி மாவட்டத்தில் சாலை மறியலில்  ஈடுபட்டனர். மேலும் கொலையாளிகளை கைது செய்ய வேண்டுமென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கொலையாளிகள் கைது செய்யப்பட்டார்கள் என்று கூறிய பின்பு போராட்டத்தை  கைவிட்டார்கள்.குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல் சிந்து மாநிலத்தில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |