Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சென்னையில் 600 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எரிபொருள் சிக்கனம் மற்றும் காற்று மாசுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் போதுமான அளவு சார்ஜிங் மையங்கள் இல்லாததால் இந்த வாகனங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு மால்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது, “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்த வகையில் அதிக அளவு சார்ஜிங் மையங்களை உருவாக்குவது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் சார்ஜிங் மையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு 15 ரூபாய் என வசூல் செய்யப்படும்.” எனக் கூறினார்.

Categories

Tech |