Categories
தேசிய செய்திகள்

“ஹிஜாப் அணிந்து செல்ல தடை?”…. கல்லூரி மாணவிகளுக்கு அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது.

இருப்பினும் 6 முஸ்லிம் மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு மூன்று வார காலங்களாக கல்லூரிக்குள் நுழையவும், தேர்வு எழுதவும் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், “இந்து மதத்தில் காவி உடை அணிவது கட்டாயம் என்றால் இந்து மாணவர்களும் காவி உடை அணிந்து வரட்டும்.

அதேபோல் பெண்கள் ஹிஜாப் அணிவது எங்கள் மதத்தில் கட்டாயம். அது எங்களுடைய உரிமை. இன்னும் தேர்வுக்கு இரண்டு மாதங்களே உள்ளது. எங்களுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள். எங்களை தயைகூர்ந்து தேர்வு அனுமதியுங்கள்” என்று கல்லூரி நிர்வாகத்திடம் கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |