தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4 (இன்று) வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 20 நபர்கள் வரை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.