கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி நெல்லையில் உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் இடிபாடுகளில் சிக்கி டவுனை சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவனான அன்பழகன், நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவனான விஸ்வரஞ்சன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இசக்கி பிரகாஷ், அபுபக்கர், சஞ்சய் உட்பட நான்கு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான விவகாரத்தில் தலைமையாசிரியர், தாளாளர் மீதான வழக்கை மதுரை கிளை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.