Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதத்தில்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாத்தூர் கோணம் பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அனிஷா இந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் அனுஷா வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி ஷாஜினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |