Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி வழக்கு…. திடீர் திருப்பம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி உத்தரவு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் ஏற்கனவே தமிழக அரசு இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு இழப்பீடு, மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்டவற்றை வழங்கி நிதி பற்றாக்குறையில் உள்ளது. இந்த நிலையில் அரசு நகைகடன்களை தள்ளுபடி செய்யும் போது பல விதிமீறல்கள் நடைபெறும். அதோடு மட்டுமில்லாமல் கடன் தள்ளுபடி சலுகை நகை கடனுக்கான வட்டி மற்றும் அசலை சிறிது சிறிதாக கட்டி வருபவர்களுக்கு வழங்காமல், எந்த தொகையும் செலுத்தாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போதைய நகைகடன் தள்ளுபடியில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. எனவே நகைகடன் தள்ளுபடி உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் ராம்குமார் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு மற்றும் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஆனால் மனுதாரர் ராம்குமார் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நீதிபதிகள் மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |