நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த செம ஹிட் கொடுத்த திரைப்படம் மாஸ்டர் தென்னிந்தியாவில் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன் , ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன் மற்றும் அப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி கதாபாத்திரத்தில் நடித்தது அப்படத்தை மாபெரும் வெற்றி அடையச் செய்தது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி தென்னிந்திய திரையுலகில் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி சம்பளமாக ரூபாய் 10 கோடி பெற்றிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது