கர்நாடகாவின் உள்துறை அமைச்சர் மதத்தைக் கடைப் பிடிப்பதற்காக யாரும் பள்ளிக்கு வர வேண்டாமென்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சகம் பள்ளி உட்பட எந்தவித கல்வி கற்கும் நிலையங்களிலும் மாணவர்கள் மதத்தை வெளிபடுத்தும் படியான உடைகளை அணியக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க இன்று குந்தாப்பூர் பியூ கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வாசலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் நேற்று 100 க்கும் மேலான இந்து மாணவர்கள் காவி உடை அணிந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் கல்வி நிலையங்களுள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சரான ஞானேந்திரா மதத்தை கடைபிடிக்கும் எவரும் பள்ளிக்கு வர வேண்டாம் என்று என்ற தேசிய ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.