Categories
அரசியல்

“வீடு புகுந்து வெட்டுவேன்…” அதிமுக நிர்வாகியின் சர்ச்சையான பேச்சு…. கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் சண்முககனி உரையாற்றினார். அவர் கட்சியினர் மத்தியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதில் அவர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதன்பிறகு கட்சி மாறினால் அவர்களை வீடுபுகுந்து வெட்டி விடுவேன் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில் தான் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

சண்முககனியின் இந்த சர்ச்சையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு பேசிய அதிமுக நிர்வாகி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மிரட்டல் 506 (1), ஆயுதங்களை பயன்படுத்தி மிரட்டும் வகையில் பேசுவது 505 (1பி), இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியது 153 (ஏ) என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |